SPB-யின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்! ஆலோசனையில் மருத்துவ குழு

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரமாக எஸ்.பி.பாலசுபரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், தற்போது இவர் எம்.ஜி.எம் மருத்துவமனையின் 11-வது மாடியில் வைக்கப்பட்டு உயிர் காக்கும் கருவியின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நேற்று இரவில் இருந்தே அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனையில் துணை இயக்குனர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,தற்போது எஸ்.பி.பியின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மருத்துவ குழு அவர் உடல்நிலை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 5-ஆம் திகதி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்.பி.பியின் உடல்நிலை, கடந்த 13-ஆம் திகதி உடல்நிலை மேலும், மோசமடைந்தது.

அதன் பின் வெளிநாட்டு மருத்துவர்கள் மற்றும் உயிர்காக்கும் மருத்துவ கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததன் பயனாக உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர் விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் உட்பட பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்