உயிரிழந்த பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பியின் இறுதிச்சடங்கு அவருடைய பண்ணை விட்டில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் சரியாக 1.04 மணிக்கு உயிரிழந்ததாக, நடிகரான வெங்கட்பிரபு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இவரின் மரண செய்தியைக் கேட்டு திரைப்பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த எஸ்.பி.பியின் உடல் சத்தியம் தியேட்டரில் திரைப்பிரபலங்களுக்காக சற்று நேரம் வைத்துவிட்டு, அதன் பின் சென்னை பெரியபாளையத்தில் இருக்கும் தாமரைப்பக்கம் பகுதியில் எஸ்.பி.பியின் பண்னை வீடு உள்ளது.
அங்கு அவரின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.