S.P.B-யின் உடல் நாளை அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம்! குடும்பத்தினர் சொன்ன தகவல்

Report Print Santhan in பொழுதுபோக்கு

மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நாளை அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரணியம் கொரோனாவின் லேசான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதற்கான உரிய சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், கொரோனாவில் இருந்து மீண்டார். இருப்பினும் அவரின் உடல்நிலை, நுரையீரலில் இருக்கும் பிரச்சனை தொடர்பாக தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று அவர் உடல்நிலை மோசமடைய, இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மரணச் செய்தி திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நாளை காலை வரை, சென்னையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

பின்னர் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணைவீட்டில் அடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்