SPB மரணத்துக்கு காரணம் இதுதான்! அவருக்கு கொரோனா இல்லை.. வெளியான மருத்துவமனை அறிக்கை

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பாடகர் எஸ்பிபி உயிரிழந்துள்ள நிலையில் அவர் சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைவியில் கடந்த மாதம் 5ஆம் திகதி சேர்க்கப்பட்டார்.

பின்னர் கொரோனா நெகடிவ் என அவருக்கு வந்த போதும், வேறு உடல் நலப்பிரச்சினைகள் ஏற்பட்டதால் இன்று 1.04 மணிக்கு அவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் எம்ஜிஎம் மருத்துவமனை தற்போது அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் கொரோனாவால் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட எஸ்பிபிக்கு கொரோனா நெகடிவ் என கடந்த 4ஆம் திகதி வந்தது.

தொடர்ந்து உயிர்காக்கும் கருவி மூலம் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக உயிர்பிரிந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்