மறைந்த பாடகர் SPB-யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியமின் நிகர சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்பிபி என அழைக்கப்படும் எஸ்பி. பாலசுப்ரமணியம் நேற்று மாரடைப்பால் காலமானார்.

அவரின் மறைவு இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏனெனில் எஸ்பிபி 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

இதோடு பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து நடிகராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

ஆறு முறை சிறந்த பாடகருக்கான தேசிய விருதை வென்றுள்ள எஸ்பிபி கணக்கில் அடங்காத பல்வேறு மாநில விருதுகளை வென்றிருக்கிறார்.

எஸ்பிபி இறக்கும் போது அவரது நிகர சொத்து மதிப்பு கிட்டத்தட்ட $114 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நீண்ட காலம் தனது தொழிலில் கடுமையான உழைப்பால் பெரும் வெற்றியாளராக எஸ்பிபி வலம் வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

எஸ்பிபியின் கடந்தகால படைப்புகளிலிருந்து பெறப்பட்ட ராயல்டி மற்றும் இசையில் அவரின் பல்வேறு பங்களிப்புகளையும் சேர்த்தே இந்த மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்