எஸ்பிபி உடலை பார்த்து கதறி அழுத அவரின் நெருங்கிய நண்பரான பாடகர் மனோ! நெஞ்சை உருக்கும் காட்சி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

எஸ்பிபி உடலை பார்த்து பாடகர் மனோ கதறி அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது.

பாடகர் எஸ்பிபியின் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவரின் உடல் தாமரைபாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பல திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் எஸ்பிபியின் நண்பரும், பாடகருமான மனோ நேரில் வந்து உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அப்போது நெஞ்சில் கையைய அணைத்தப்படி கண்ணீர் விட்டு கதறி அழுதார் மனோர்.

அவர் அருகில் இருந்த இசையமைப்பாளர் தினா மனோவை அணைத்தபடி ஆசுவாசப்படுத்தினார்.

மேலும் எஸ்பிபி உடலுக்கு பாரதிராஜா, தேவி ஸ்ரீ பிரசாத், இயக்குனர் அமீர் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்