எப்போதும் புன்னகையுடன் இருக்கும் எஸ்பிபியை கோபமடைய செய்த ஒரு சம்பவம்! அடுத்த நிமிடம் அவர் கூறிய வார்த்தை

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

எந்த நேரமும் புன்னகையோடு இருக்கும் எஸ்பிபி கோபமாக ஆன அந்த நொடியை மறக்கவே முடியாது என பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் கூறியுள்ளார்.

மறைந்த எஸ்பிபியின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

எப்போதும் புன்னகையுடன் இருக்கும் அவருக்கு பிரபலங்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் பிரியதர்ஷன், தனக்கு எஸ்பிபியுடன் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், நான் அவரை முதன்முதலாக, 1983 ஆம் ஆண்டு அவருடைய ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் சந்தித்தேன். அப்போது அவருக்காக காத்திருந்த போது, ஒரு வயலின் இசைக் கலைஞர் பண உதவிக்காக அவரை பார்க்க வந்தார்.

எஸ்பிபி வந்ததும் அந்த இசைக் கலைஞர் அவர் காலைத் தொட்டார், இதையடுத்து எஸ்பிபிக்கு கோபம் வந்துவிட்டது.

நான் அவரை புன்னகை இல்லாமல் பார்த்தது அப்போதுதான். அடுத்த நிமிடமே, அவரைக் கூப்பிட்டு, நான் உங்களுக்கு மூத்தவனாக இருந்தாலும் உங்கள் பெற்றோர், குருவைத் தவிர, யார் கால்லயும் விழாதீங்க என்று அறிவுரை செய்தார் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்