S.P.B குறித்து எதையாவது மறைத்ததாக நினைத்தால் மன்னியுங்கள்! உலகில் அப்பா இல்லை... மகன் சரண் உருக்கமான பேச்சு

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

எஸ்பிபிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பில் அவர் மகனும், மருத்துவமனை நிர்வாகமும் விளக்கமளித்துள்ளனர்.

பின்னணி பாடகர் எஸ்பிபி சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 25ஆம் திகதி உயிரிழந்தார்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான மருத்துவமனை பில் தொடர்பில் பல்வேறு வதந்திகள் உலா வந்தது.

இது தொடர்பில் மருத்துவமனை நிர்வாகத்துடன் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எஸ்பிபியின் மகன் சரண், மருத்துவமனையில் இருக்கும் போது அப்பா செய்கையால் மட்டுமே பேசினார்.

நாங்கள் மறைத்த விடயங்கள் அனைத்தும் வெளிப்படையாக வந்துள்ளது. நான் எதையாவது மறைத்ததாக நீங்கள் நினைத்தால் மன்னித்து கொள்ளுங்கள்.

கொரோனாவால் அப்பா இறக்கவில்லை. நுரையீரல் பாதிப்பு பிரச்சனையால் சிகிச்சை பலனின்றியே உயிரிழந்தார்

அப்பாவுக்கு நினைவிடம் கட்ட வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கான திட்டமிடல் நடந்துக் கொண்டிருக்கிறது.

மருத்துவமனை கட்டணம் குறித்து எழுந்த சர்ச்சைகள் அனைத்தும் வதந்தி. எங்களுக்கு இந்த துயரத்தில் இருந்து மீண்டும் வரவே மிகவும் கடினமாக உள்ளது.

அப்படி இருக்கும் போது இது போன்ற வதந்திகளை ஏன் பரப்புகிறார்கள் என தெரியவில்லை.

மருத்துவ தொகை அதிகமாக இருந்தது அதற்காக அரசை நாடியிருந்தோம் எனவும், ஆனால் அரசு தரப்பிலிருந்து பதில் வர காலதாமதமானதாக வெளிவந்த தகவல்கள் ஏதும் உண்மையில்லை.

பத்திரிக்கையாளர்கள் ஒத்துழைக்காததால் தான் தாமரைப்பாக்கத்திற்கு சென்றோம் அஜித் எனக்கு நல்ல நண்பர். அவர் வந்து அப்பாவ பார்த்தா என்ன, பார்க்கலைனா என்ன?

இதை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை, எங்களுக்கு அப்பா இப்போது இல்லை. உலகில் இப்போது எஸ்பிபி இல்லை, அந்த வருத்தத்தில் நாங்கள் உள்ளோம் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்