பாடகர் SPB-ஐ கெளரவிக்கும் வகையில் வெளியான முக்கிய அறிவிப்பு

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

எஸ்.பி.பியின் பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை நடிகர் ராதாரவி வெளியிட்டுள்ளார்.

அதன்படி டப்பிங் யூனியனின் வாழ்நாள் உறுப்பினரான திரு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை கௌரவிக்கும் விதமாக இந்த விடயம் செய்யப்படவுள்ளது.

இன்று நடைபெற்ற டப்பிங் யூனியனின் செயற்குழு குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்தே ராதாரவி இதை அறிவித்துள்ளார்.

எஸ்பி பாலசுப்ரமணியமை கெளரவிக்கும் வகையிலும் அவரின் நினைவுகளை போற்றும் வகையில் இந்த புதிய டப்பிங் ஸ்டுடியோ திறக்கப்படவுள்ளது.

அப்போது பேசிய ராதாரவி, டப்பிங் யூனியனுக்கென தனியே டப்பிங் ஸ்டுடியோ ஒன்று இசைத் துறைச் சாதனையாளரும் டப்பிங் கலைஞருமான எஸ்பிபி அவர்களின் நினைவாக விரைவில் திறக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்