என் அம்மா ஒரு ஈழத்தமிழர்! போரில் இருந்த கொடுமைகள்... முத்தையா முரளிதரன் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தான் நடிக்க மறுத்துவிட்டதாக பிரபல நடிகர் டிஜே அருணாச்சலம் கூறியுள்ளார்.

இலங்கை கிரிகெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை 800 எனும் பெயரில் திரைப்படமாகிறது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சீமான், பாரதிராஜா, சீனு ராமசாமி, பேராசிரியர் கல்யாண சுந்தரம் உள்ளிட்ட பலர் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் விஜய் சேதுபதி இது தொடர்பில் எதுவும் இன்னும் பேசாமல் மெளனம் காத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு வந்ததாகவும் அதை தான் நிராகரித்துவிட்டதாக அசுரன் படத்தில் நடிகர் டிஜே அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், நான் இந்தியாவில் இருந்தபோது 800 படக்குழு என்னை அணுகினர். என்னை முரளிதரனின் இளமைக்கால கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென கூறி கதைகளத்தை தெரிவித்தனர்.

இலங்கை - தமிழர்களுக்கும் இடையிலான போர் வாழ்க்கை வரலாற்றில் சித்தரிக்கப்பட்டுள்ளது, அது எனக்கு சரியாகப்படவில்லை. என் அம்மா ஒரு ஈழத்தமிழர்.

போரில் ஏராளமான கொடுமைகள் இருந்தன, மேலும் படத்தின் அரசியலில் நான் ஈடுபட விரும்பாததால் நடிக்க முடியாது என தவிர்த்துவிட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்