முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதியை எதிர்ப்பவர்கள் ஏன் இதை எதிர்க்கவில்லை? இலங்கையில் பிறந்த நடிகை ராதிகா கோபம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்ப்பவர்கள் தமிழருக்கு சொந்தமான ஹைதராபாத் ஐபிஎல் அணிக்கு அவர் பயிற்சியாளராக இருப்பதை ஏன் எதிர்க்கவில்லை என நடிகை ராதிகா கேள்வியெழுப்பியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 800-ல் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இதற்கு தமிழகத்தை சேர்ந்த பல பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையில் பிறந்த நடிகை ராதிகா இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என கூறுபவர்களுக்கு வேலை எதுவும் இல்லையா?

ஐபிஎல் கிரிக்கெட் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக முரளிதரன் உள்ளார்.

அந்த அணியின் உரிமையாளர் அரசியலில் தொடர்புடைய தமிழர் தானே, அதை ஏன் கேள்வி கேட்காமல் உள்ளீர்கள்.

விஜய் சேதுபதி ஒரு நடிகர், ஒரு நடிகரைக் கட்டுப்படுத்த வேண்டாம் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்