தனக்கு நடந்த கொடுமையை கூறி அழுத திருநங்கை! தமிழ் படங்களில் நடித்த நடிகர் செய்த நெகிழ்ச்சி உதவி.. குவியும் பாராட்டு

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
485Shares

திருநங்கை நடத்தி வந்த பிரியாணி கடையை சில நபர்கள் அடித்து நொறுக்கி அவரையும் தாக்கிய நிலையில் பிரபல நடிகர் ஜெயசூர்யா உதவிகரம் நீட்டியுள்ளார்.

கேரளா மாநிலம் கொச்சியில் ஷாதி என்ற திருநங்கை தனியாக ஒரு பிரியாணி கடை நடத்தி வந்தார். சில நபர்கள் அவரைக் கடை நடத்த விடாமல் தொல்லைத் தந்ததுடன் அவரைத் தாக்கிவிட்டு கடையையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

தனக்கு நடந்த கொடுமையை ஷாதி அழுது கொண்டே பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கேரள மாநில அமைச்சர் கே.கே சைலஜா சஞ்சனா ஷாதிக்கு நிவாரணம் அளிப்பதாகவும் , அவரைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இந்நிலையில், நடிகர் ஜெயசூர்யா திருநங்கை சைலஜாவுக்கு தனியாக ஒரு பிரியாணி கடை வைத்து கொடுத்து உதவியுள்ளார்.

ஜெயசூர்யா தமிழில் வசூல் ராஜா எம்பிபிஎஸ், என் மன வானில், மனதோடு மழைக்காலம் போல சில படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள ஜெயசூர்யாவின் இந்த மனிதநேய செயலை

பலரும் பாராட்டியுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்