நடிகர் விஜய்சேதுபதியின் இச்செயல் தமிழர்களை அவமதிப்பதற்குச் சமம்! வெளிநாட்டில் இருந்த வந்த குரல்

Report Print Basu in பொழுதுபோக்கு
2237Shares

முரளிதரன் கதாப்பாத்திரத்தை விஜய்சேதுபதி ஏற்று நடிப்பது தமிழர்களை அவமதிப்பதற்குச் சமம் என மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைப்படத்தில் அவரின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டுள்ளார்.

இப்படத்திற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இயக்குநர் பாரதிராஜா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கவிஞர் வைரமுத்து உட்பட பலர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேலும், விஜய் சேதுபதி இப்படத்திலிருந்து விலக வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அப்படத்தில் நடிப்பதா? விலகுவதா? என்பது பற்றி ஆசோசனை நடத்தி வரும் நடிகர் விஜய் சேதுபதி ஓரிரு நாட்களில் தனது முடிவை அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், முரளிதரன் கதாப்பாத்திரத்தை விஜய்சேதுபதி ஏற்று நடிப்பது தமிழர்களை அவமதிப்பதற்குச் சமம்.

முரளிதரன் உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரராக இருக்கலாம், ஆனால் நல்ல மனிதராக தோல்வியடைகிறார் என மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்