விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் கண்டுபிடிப்பு! கைது செய்யும் நடவடிக்கை தீவிரம்

Report Print Santhan in பொழுதுபோக்கு
3407Shares

பிரபல திரைப்பட நடிகரான விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருந்தார்.

ஆனால், தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பு மற்றும் முத்தையா முரளிதரனின் கோரிக்கைகளால், அவர் அப்படத்தில் இருந்து விலகினார்.

அதன் பின், இணையவாசி ஒருவர், மிகவும் மோசமான வார்த்தைகளால், விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த்திருந்தார்.

இதனால் இதைக் கண்ட திரைப்பிரபலமான சின்மயி மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர் இந்த நபரை உடனே கண்டுபிடித்து தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதையடுத்து தற்போது, அந்த நபர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இண்டர் போல் உதவியுடன், இலங்கையில் உள்ள அவரை கைது செய்ய நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் இருந்து டுவிட் செய்ததை கண்டுபிடித்த சைபர் க்ரைம் பொலிஸ் இன்டர்போல் உதவியுடன் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்த செய்தியை அறிந்த சின்மயின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்