பீட்டர்பாலை பிரிந்த நடிகை வனிதா விஜயக்குமார் பாஜக-வில் சேரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் பிரபலமான வனிதா விஜயக்குமார், மூன்றாவது கணவரான பீட்டர் பாலை சமீபத்தில் பிரிந்தார். இதையடுத்து அதிரடி நடவடிக்கையாக வனிதா பாஜக-வில் சேர இருப்பதாக கூறப்படுகிறது.
குஷ்பு பாஜகவை சேர்ந்த நிலையில், வனிதா பாஜகவில் சேரவுள்ளாராம். இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
ஆனால், தேர்தல் சமயத்தில் பொதுவாக திரை நட்சத்திரங்களை கட்சிக்கு கொண்டுவருவதில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகள் தான் வழக்கமாக செயல்பட்டு வரும். ஆனால் இம்முறை வித்தியாசமாக பாஜக அந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டது
திரை உலகில் உள்ள பல நட்சத்திரங்களை பாஜகவில் இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் வனிதா பெயர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.