அந்த பாடலை பாடவா என SPB கேட்டார்! உடல்நிலை சரியில்லாத போது... பிரபல இசையமைப்பாளர் வெளியிட்ட உருக்கமான தகவல்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பாடகர் எஸ்பிபி தொடர்பான உருக்கமான விடயத்தை பிரபல இசையமைப்பாளர் கோட்டி பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக இருந்த எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 25ஆம் திகதி காலமானார்.

இன்றோடு அவர் உயிரிழந்து சரியாக 1 மாதம் ஆகிறது.

அவரின் மறைவில் இருந்து ரசிகர்கள் மற்றும் திரைதுறையை சார்ந்தவர்கள் இன்னும் மீளவில்லை.

இந்த நிலையில் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பல படங்களுக்கு இசையமைத்துள்ள கோட்டி, எஸ்பிபி தொடர்பில் உருக்கமான விடயத்தை பகிர்ந்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் எஸ்பிபியின் பாடல்களை பல பாடகர்கள் பாடினர்.

அப்போது பேசிய கோட்டி, இறுதி நேரத்தில் எஸ்பிபி வலியால் பெரிதும் அவதிப்பட்டார்.

பொதுவாகவே உடல்நலம் சரியில்லாத போது தனது புகழ்பெற்ற பாடலான மண்ணில் இந்த காதல் அன்றி பாடலை பாடவா என மருத்துவரிடம் எஸ்பிபி கேட்பார் என உருக்கமாக கூறினார்.

இதை கேட்ட அங்கிருந்தவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்