வனிதா பா.ஜ.கவில் இணைய போவதாக வெளியான தகவலை கிண்டலடித்த கஸ்தூரிக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
பிரபல நடிகை வனிதா தனது மூன்றாவது கணவர் பீட்டர் பாலை சமீபத்தில் பிரிந்தார்.
மேலும் பீட்டர் பால் போதைக்கு அடிமையானவர் எனவும் அவரை தன்னால் திருத்த முடியவில்லை எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் வனிதா பா.ஜ.கவில் இணைய போவதாக சில தினங்களுக்கு முன்னர் ஒரு தகவல் வெளியானது.
இது குறித்து நடிகை கஸ்தூரி டுவிட்டரில், வனிதா மேடம் சேர விருப்பம் தெரிவித்தாராம், கட்சி மேலிடம் எந்த முடிவும் சொல்லவில்லையாம் என பதிவிட்டார்.
இந்த விடயத்தை தனியார் செய்தி நிறுவனம் வனிதாவை டுவிட்டரில் டேக் செய்து பதிவிட்டது.
இதற்கு பதிலளித்த வனிதா, இந்த ஜோக்கரை நான் எப்போது என் PROவாக நியமித்தேன்?
என்னை பற்றிய அவரின் டுவீட்களை ஏன் சீரியசாக எடுத்து கொள்கிறீர்கள்? என குறித்த செய்தி நிறுவனத்தை விமர்சித்துள்ளார்.