இலங்கைக்கு போய் பாடிட்டு வரட்டுமா டா தம்பி என பாடகர் SPB என்னிடம் கேட்டார்! சீமான் வெளியிட்ட தகவல்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
1034Shares

பாடகர் எஸ்பிபிக்கு முன்னர் இலங்கை கச்சேரியில் பாட வாய்ப்பு வந்தபோது போய் பாடிட்டு வரட்டுமா டா தம்பி என்று தன்னிடம் கேட்டதாக சீமான் கூறியுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர்களான மருதுசகோதரர்கள் 219-ஆவது நினைவு தினம் நாம் தமிழர் கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது. அப்போது பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படத்தை இலங்கை மொழியில் எடுத்துக் கொள்ளுங்கள் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் எங்கள் தமிழ் பிள்ளை விஜய் சேதுபதியை வைத்து தமிழில் எடுப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

விஜய் சேதுபதியின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதால் எங்களது பேச்சில் அறிவுறுத்தல் இருந்ததே தவிர அச்சுறுத்தல் இல்லை.

மேலும், மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்துக்கு இலங்கை கச்சேரியில் பாட வாய்ப்பு வந்தபோது எதிர்ப்பு வருமோ என்று நினைத்து, போய் பாடிட்டு வரட்டுமா டா தம்பி என்று என்னிடம் கேட்டார் என்றும் சீமான் தெரிவித்தார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்