என் உயிருக்கு ஆபத்து என பிரபல இயக்குனர் சீனு ராமசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி.
இந்நிலையைில் அக்டோபர் 28 காலை இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பதிவில், என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.
முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம் என்று தெரிவித்துள்ளார்.
என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும்
— R.Seenu Ramasamy (@seenuramasamy) October 28, 2020
அவசரம்.
சீனு ராமசாமியின் ட்வீட்டால் பரபரப்பு ஏற்பட்டள்ள நிலையில் இது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
அதாவது, 800 பட விவகாரத்தில் நடிகர் விஜய் சேதுபதி ‘நன்றி, வணக்கம்’ என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். ‘நன்றி, வணக்கம்’ கூறியதன் அர்த்தம் என்ன என விஜய்சேதுபதியிடம் கேட்டேன்
நான் நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக இருப்பதாக கூறி செய்திகள் சித்தரிக்கப்படுகின்றன. எனக்கு அரசியல் சினிமா எடுக்கத் தெரியும்; சினிமாவில் உள்ள அரசியல் தெரியாது.
வாட்ஸ் அப் மூலமும், போனிலும் தொடர்ந்து மிரட்டல் வந்துகொண்டு இருக்கின்றன. சமூக வலைதளங்களில் ஆபாச வார்த்தைகளால் என்னை திட்டுகின்றனர் என இயக்குநர் சீனு ராமசாமி கூறியுள்ளார்.