இவர் தான் என் காதலர்! நடிகை பூனம் பாஜ்வா அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட புகைப்படம்: குவியும் வாழ்த்துக்கள்

Report Print Santhan in பொழுதுபோக்கு
900Shares

பிரபல திரைப்பட நடிகையான பூனம் பாஜ்வா முதல் முதறையாக தன்னுடைய காதலர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழில் சேவல் என்ற திரைப்பட மூலம் அறிமுகமான பூனம்பாஜ்வா, அதன் பின் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்து, பிரபல நடிகையானார்.

இதைத் தொடர்ந்து, தெலுங்கு, கன்னடா, மலையாளம் போன்ற மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தமிழில் இவர் நடிப்பில் கடைசியாக குப்பத்து ராஜா என்ற படத்தில் நடித்திருந்தார். படங்களைத் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் எப்போதும், ஆக்டிவ்வாக இருக்கும், அவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருவார்.

இந்நிலையில் தற்போது இவர் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். அதில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் வேர்களுக்கு, என் மைதானத்திற்கு, என் சிறகுகளுக்கும்! இந்த அழகான பையனுக்கு, இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அழகான ஆத்மா, என்னுடைய பார்ட்னர், வாழ்க்கை துணை, ரொமான்டிக் டேட், விளையாட்டுத் தோழர், சோல் மெட், எல்லா கனவுகளிலும் என் கோ கிரியேட்டர், எல்லா தருணங்களிலும் மேஜிக்

நான் உங்களுக்காக உத்தேசித்துள்ளேன், எல்லா மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும், உற்சாகமான அன்பும், வேடிக்கையாகவும், இந்த தருணத்திலிருந்து பயணிக்க வேண்டும், என்றென்றும்! இந்த நாள் இன்னும் பல வரவேண்டும் பூபூ !! வார்த்தைகளால் எப்போதும் சொல்லக்கூடியதை விட நான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன்! என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்