பிரபல தமிழ் சின்னத்திரை நடிகைக்கு திருமணம் முடிந்தது! வெளியான தம்பதியின் அழகிய புகைப்படம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
4120Shares

பிரபல சின்னத்திரை நடிகை உஷா ஜகன்நாதன் என்கிற உஷா சாய்க்கு திருமணம் நடந்துள்ளது.

தமிழ் சின்னத்திரை நடிகையான உஷாவுக்கும் பிரகாஷ் என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த நிலையில் இருவருக்கும் நேற்று திருமணம் நடந்துள்ளது.

இந்த திருமணத்தில் தம்பதியின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

கணவருடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்ட உஷா, கடவுள் அருளால் எங்களுக்கு திருமணம் நடந்துள்ளது, இப்போது நான் திருமதி பிரகாஷ் என மகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.

புதுமணத்தம்பதி பிரகாஷ் - உஷாவுக்கு சக நடிகர், நடிகைகள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்