என் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும்! வாழ்வில் உள்ள துக்கத்தை.. பீட்டர் பாலை பிரிந்த வனிதா வெளியிட்ட பதிவு

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
931Shares

நடிகை வனிதா விஜயகுமார் டுவிட்டரில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

வனிதா, பீட்டர் பால் என்பவரை சில மாதங்களுக்கு முன்னர் மூன்றாம் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் சமீபத்தில் கணவரை வனிதா பிரிந்தார், மேலும் பீட்டர் பால் போதைக்கு அடிமையானவர் எனவும் அவரை திருத்த முடியவில்லை எனவும் வனிதா கூறினார்.

இந்த சூழலில் வனிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சனம் வைப்பவர்களுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில், என்னை நேசிக்கும் மற்றும் என்னைப் பற்றி அக்கறை கொண்ட அனைவருக்கும் , வாழ்வில் என் மகிழ்ச்சி மற்றும் துக்கங்களைப் பற்றி உங்களுக்கு எப்போதும் தெரியப்படுத்துவேன்.

என் வாழ்க்கையை பற்றி யூகிக்க விரும்புகிறவர்கள் தயவு செய்து உங்கள் வேலையை பாருங்கள். சில போலி நபர்கள் என்னை பற்றி அரைகுறையான செய்திகளை பரப்புகிறார்கள்.

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை தங்கள் விருப்பப்படி வாழ உரிமை உண்டு, என் வாழ்க்கையில் நுழைவதற்கு பதிலாக உங்கள் வாழ்க்கையை பாருங்கள்.

நான் தைரியமான மற்றும் பலரால் ஆசிர்வதிக்கப்பட்ட பெண், நன்றி என பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்