காலமானார் குசும்புக்காரர்: புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி மரணம்

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு
950Shares

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள தகவல் திரை உலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மெலிந்த நிலையில் இருக்கும் புகைப்படம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவருக்கு இலவச சிகிச்சை அளித்து பேருதவி புரிந்திருக்கிறார், திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ டாக்டர் சரவணன்.

மட்டுமின்றி, நடிகர்கள் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி உள்ளிடோரும் அவருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

அவர்களையடுத்து, நடிகர் சிம்புவும் ஒரு லட்சம் நிதியுதவி அளித்தார். ரோபோ ஷங்கர் தவசியை சந்தித்து, உங்கள் புகைப்படத்தைப் பார்த்தபோது கஷ்டமாக இருந்தது.

மன உறுதியோடு இருங்கள். உங்கள் மீசையைப் பழையப்படி பார்க்கவேண்டும் என்று நம்பிக்கையூட்டினார்.

இந்த நிலையில், புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு வயது 60.

நான் கடவுள், ஜில்லா, வீரம், சுந்தரபாண்டியன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் தவசி.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்