நடிகை ரோஜாவின் நெகிழ்ச்சி செயல்! அனாதை சிறுமியை அழைத்து அவருக்கு கொடுத்த வாக்குறுதி: குவியும் பாராட்டு

Report Print Santhan in பொழுதுபோக்கு
1855Shares

பிரபல திரைப்பட நடிகையும், எம்.எல்.ஏவுமான நடிகை ரோஜா பெண் குழந்தை ஒருவரை தத்தெடுத்து, அவரை மருத்துவர் படிக்க வைப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை ரோஜா, இப்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, எம்.எல்.ஏவாக உள்ளார்.

இவர் அதன் மூலம் பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பச்சிக்கப்பள்ளம் என்ற கிராமத்தில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில், புஷ்பகுமாரி என்ற சிறுமிக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்பது ஆசையாக இருந்துள்ளது.

இதற்காக அவர் நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஆனால், அந்த சிறுமியிடம், மருத்துவக் கல்லூரியில் சேர போதுமான நிதி வசதி இல்லாத நிலையில் அவரால் மருத்துவக் கல்லூரியில் சேர இயலவில்லை.

இந்த ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை நடத்தி வந்த குழுவினர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் உள்ளரோஜாவை அணுகினர்.

அப்போது, அவர்களின் தேவைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ ரோஜா, அந்த சிறுமிக்கு உதவ முன்வந்து, புஷ்புகுமாரியின் கனவை நிறைவேற்றுவதாக வாக்களித்தார்.

அவரை நேரில் சென்று சந்தித்து உறுதி அளித்த அவர்,அந்த பெண்ணின் படிப்பு செலவை முழுக்க முழுக்க ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

அரசியல்வாதியாக பல்வேறு தருணங்களில் மக்களுக்கு பல்வேறு நலன்களை ரோஜா செய்து வரும் நிலையில், இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை அவருக்கு பெற்றுத்தந்துள்ளது. அவரை இணையவாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்