நடிகை சித்ராவுக்கு சொகுசு வீடு மற்றும் ஆடி கார் எப்படி வந்தது? அவரின் தோழி கூறிய புதிய பரபரப்பு தகவல்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
5540Shares

நடிகை சித்ராவுக்கு சொகுசு வீடுகள் மற்றும் ஆடி கார் ஆகியவை கிடைத்தது எப்படி என அவரது தோழி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 9 ஆம் திகதி நட்சத்திர ஹொட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ரா கடந்த அக்டோபர் மாதம் தான் தனது காதலரான ஹேமந்தை பதிவு திருமணம் செய்து கொண்டார்.

வரும் பிப்ரவரி மாதம் விமர்சையாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர்.

சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் விஜயா குற்றம்சாட்டி வருகின்றார்.

அதில் ஹேமந்த் சித்ராவை அடித்து கொன்றிருக்கலாம் என்றும் கூறி வருகிறார். ஆனால் இதனை மறுத்துள்ள ஹேமந்தின் தந்தை, சித்ரா இதற்கு முன்பு 3 பேரை காதலித்துள்ளார்.

அவர்களுடன் டேட்டிங் சென்றுள்ளார். சித்ராவுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர்கள், ஆதாரங்களை காட்டி திருமணத்தை நிறுத்தி விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் தான் சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என்று பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் பகீர் புகாரை ஒன்றை அளித்தார்.

இதனிடையில் ஆடி கார் மற்றும் திருவான்மியூரில் சொகுசு வீடு ஆகியவை சித்ராவுக்கு தொழிலதிபர்கள் மற்றும் விஐபிக்களால் கிடைத்தது என்றும் குண்டை தூக்கிப் போட்டுள்ளார் மாமனார் ரவிச்சந்திரன்.

இந்நிலையில் நடிகை சித்ராவின் தோழியான கங்கா அவர் குறித்த சில திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.

அதாவது சித்ரா மீது விஐபியின் மகன் ஒருவருக்கு கண் இருந்தது. சித்ரா திடீரென ஆடி கார் மற்றும் திருவான்மியூரில் சொகுசு பங்களா எல்லாமே அவர்களின் செல்வாக்கால் வாங்கியதுதான் என்று கூறி அதிரவைத்துள்ளார்.

இதனிடையே சித்ராவின் தோழிகளிடம் அவரது மரணம் குறித்து பொலிசார் விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்