கணவரை பயமுறுத்த தூக்கில் தொங்குவது போல நடித்த சித்ரா? பின்னர் வினையான விளையாட்டு... அடித்து கூறும் பிரபலமான பெண்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
2171Shares

நடிகை சித்ரா தனது கணவர் ஹேமந்தை பயமுறுத்துவதற்காக தூக்கு போடுவது போல நடித்ததாகவும், ஆனால் அது அவருக்கு வினையாக முடிந்துவிட்டதாகவும் பிரபல பெண் ஜோதிடர் ஜெயஸ்ரீ பாலன் கூறியுள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் திகதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹொட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரை தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் பொலிசார் கணவர் ஹேமந்தை கைது செய்தனர். இந்தநிலையில் சித்ரா தொடர்பில் பிரபல பெண் ஜோதிடர் ஜெயஸ்ரீ பாலன் சில விடயங்களை கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், சித்ரா ஜாதகப்படி அவர் மே மாதம் 2ஆம் திகதி 92ஆம் ஆண்டு பிறந்துள்ளார். ஜாதக கணிப்பின் படி அவர் மாலை 5.15 மணிக்கு பிறந்திருக்கிறார்.

அவர் இயல்பிலேயே திறமையானவராகவும், துணிச்சல் மிக்கவராகவும் இருந்திருக்க வேண்டும்.

சித்ரா கஷ்டப்பட்டு சம்பாதித்த வீட்டை அவர் கணவர் தரப்பு அபகரிக்க திட்டம் போட்டனர் என அவரின் தாய் நினைத்து அது தொடர்பாக சித்ராவுடன் வாக்குவாதம் செய்ததால் தான் அவர் வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார்.

சித்ராவின் ராகு கணக்கின் படி கணவர் சொத்தை எடுக்க நினைத்ததோடு அவர் மீதும் சந்தேகப்பட்டிருக்கிறார்.

இதையடுத்து கணவரை எப்படியாவது பயமுறுத்த வேண்டும் என சித்ரா நினைத்தே தூக்கில் தொங்குவது போல நடிக்க முடிவு செய்திருக்கிறார்.

ஆனால் இது விபத்தாக முடிந்து அவர் தூக்கில் தவறுதலாக தொங்கியிருக்கிறார் என்றே அவர் ஜாதகம் கூறுகிறது. ஆகவே அவர் விளையாட்டாக செய்ததே வினையாகியுள்ளது.

அவர் மரணத்துக்கு கணவர் நேரடியாக காரணமாக இருக்க முடியாது என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்