பிரபல நடிகர் ரமேஷ் மகளுக்கு திருமணம் முடிந்தது! மாப்பிள்ளை யார் தெரியுமா? அவரே வெளியிட்ட புகைப்படம்

Report Print Santhan in பொழுதுபோக்கு
2857Shares

பிரபல திரைப்பட நடிகர் ரமேஷ் தன்னுடைய மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டதாக கூறி, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் 1987-ஆம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகர் ரமேஷ், அதன் பின் கமல் நடிப்பில் உருவான உன்னால் முடியும் தம்பி, பென்மணி அவள் கண்மனி, கேளடி கண்மனி, பிரபுவுடன் டூயட் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில், இவரின் மகளான Niharika-வுக்கு தொழிலதிபரான Akshay என்பவருடன் இன்று பெங்களூருவில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்ளும் அளவிற்கு சிம்பிளாக நடைபெற்றுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ரமேஷ் தன்னுடைய மகளின் திருமணம்த்தை நெருங்கிய உறவினர்களுடன் முடித்துள்ளார்.

இருப்பினும் திருமணம் தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பதிவிட்டு மணமக்களை வாழ்த்தும் படி குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்