அப்பாவை கடைசியாக பார்த்திருக்க முடியாது! தந்தை மரணம் குறித்து பிக்பாஸ் அனிதா வேதனையுடன் வெளியிட்ட முதல் பதிவு

Report Print Santhan in பொழுதுபோக்கு
2240Shares

பிக்பாஸ் அனிதா தனது தந்தை மரணம் குறித்து மிகுந்த வேதனையுடன் உருக்கமான தகவலை பதிவிட்டுள்ளார்.

தமிழில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் செய்தி வாசிப்பாளர் அனிதா. ஏற்கனவே செய்தி வாசிப்பின் மூலம் பிரபலமான அனிதாவிற்கு, இந்த பிக்பாஸ் நல்ல ஒரு வாய்ப்பாக இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவருக்கு இருந்த ரசிகர்கள் பட்டாளம் மேலும் கூடியது.

இந்நிலையில், அவரின் தந்தையும் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் இன்று மாரடைப்பால் இறந்துள்ளார், தரிசனத்திற்காக தனது மகனுடன் சீரடி சென்று பின் சென்னை திரும்பும் போது இரயிலில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

தந்தையின் மரணம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் அனிதா சம்பத், எனது தந்தை ஆர்.சி.சம்பத் வயது முதிர்வு காரணமாக திடீரென மரணமடைந்தார். அவருக்கு அல்சர் பாதிப்பு இருந்தது. அவர் இப்போது இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக என்னை தனிமைப்படுத்திக் கொள்ள சென்ற போது அவரை சந்தித்தேன். பிக்பாஸ் முடிந்து வீட்டிக்கு வந்ததும் அவர் சீரடி சென்று விட்டார். நான் அவருடன் பேசக்கூட இல்லை. ஏனெனில் அவரது தொலைபேசியில் சிக்னல் இல்லாததால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இன்று காலை 8 மணிக்கு அவர் இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தியை அறிந்தேன். அவர் சீரடியில் இருந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்தார்.

நாளை சென்னை வந்திருப்பார். நான் அவர் உயிருடன் இருப்பதாக எண்ணுகிறேன். என்னால் நம்பமுடியவில்லை. டாடி நீ வீட்டுக்கு நடந்து வரணும். உன்கிட்ட நெறைய பேசணும். உன்னுடைய குரல் கேட்டு நூறு நாள் ஆச்சு.

தெரிஞ்சிருந்தா முன்னாடியே பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டு முன்னாடியே அப்பா கூட கொஞ்ச நாள் இருந்திருப்பேன்.

விஜய் டிவி நிகழ்ச்சி திரும்ப வரும். என் அப்பா இனி திரும்ப வரமாட்டாரு. இந்த வாரம் நான் நிகழ்ச்சியில் காப்பாற்றப்பட்டிருந்தால் கடைசியாகக் கூட அப்பாவ பாத்திருக்க முடியாது. வாழ்க்கை கணிக்க முடியாதது.

எல்லாம் ஒரு காரணத்துடன் தான் நடக்கிறது. பெற்றோரை கவனித்துக் கொள்ளுங்கள். நான் அவரை மிஸ் செய்கிறேன். குற்றவுணர்ச்சியாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்