சித்ரா வீடியோக்களை என் செல்போனில் இருந்து அழித்தார்! அடித்து விரட்டினார்.. கணவர் ஹேமந்த் குறித்து இறுதியாக வாயை திறந்த உதவியாளர்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
1441Shares

சித்ராவுடன் தொடர்ந்து பயணித்த அவரது உதவியாளர் சலீமிடம் பொலிசார் ஏன் விசாரணை நடத்தவில்லை என கேள்வியெழுந்துள்ள நிலையில் ஹேமந்த் குறித்து சில அதிர்ச்சி தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா மரணித்து இரு வாரங்கள் கடந்துவிட்டது. அவரது உடலைப் பரிசோதித்த மருத்துவப் பரிசோதனையின் முதல்கட்ட அறிக்கை, சித்ரா தற்கொலை செய்ததாகக் குறிப்பிடுவதாகக் கூறியது காவல்துறை.

அவரை தற்கொலைக்குத் தூண்டினார் எனக் கைது செய்யப்பட்டு தற்போது சிறையிலிருக்கிறார் ஹேமந்த். இந்த மரணம் குறித்த ஆர்டிஒ தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் அந்த அறிக்கையை நேற்று ஆர்டிஓ திவ்யாஸ்ரீ பொலிசில் சமர்பித்துவிட்டார்.

சித்ராவிடம் உதவியாளராக இருந்த சலீம் என்பவரிடம் பொலிசார் இன்னும் விசாரணை நடத்தவில்லை.சலீம் சித்ராவுக்கு ரசிகராக அறிமுகமாகி சுமார் இரண்டரை ஆண்டுகளாக உதவியாளராக இருந்தவர்.

சித்ரா படப்பிடிப்பு, நிகழ்ச்சிகளுக்கு கூடவே செல்லும் சலீமின் வேலை அங்கு நடக்கும் எல்லாவற்றையும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பது.

சலீம் கூறுகையில், பத்து மணிக்கு மேல் தான் தூங்கி எழுவார் ஹேமந்த். வேலைக்கு எதுவும் போக மாட்டார். சித்ரா படப்பிடிப்பில் இருந்தாலும் அவருக்கு போன் செய்து கொண்டே இருப்பார்.

தி.நகர் வீட்டிலயே அவர்கள் இருவருக்கும் இடையே பெரிய சண்டை ஏற்பட்டிருக்கிறது. என்னை அவர் ஆரம்பத்தில் இருந்தே வில்லனாக தான் பார்த்தார்.

சித்ராவுடன் போய் நான் வீடியோக்கள் எடுக்கறதுக்கு முதலில் தடை போட்டார். நான் சித்ராவை வீடியோ எடுத்து சம்பாதிக்கறேன் என தவறாக புரிந்து கொண்டார். ஒருகட்டத்தில் என் செல்போனை பறித்து அதில் இருந்த சித்ரா தொடர்பான வீடியோக்களையெல்லாம் அழிச்சுட்டு என்னையும் அடித்து விரட்டிட்டார்.

இதையெல்லாம் சித்ராவால் தடுக்க முடியவில்லை என கூறியுள்ளார்.

பொலிசார் 14க்கும் மேற்பட்டவர்களிடம் சித்ரா தற்கொலை குறித்து விசாரித்த போதும் அவருடன் தொடர்ந்து பயணித்த சலீமிடம் ஏன் விசாரிக்கவில்லை என பலரும் கேட்கிறார்கள்.

இதோடு யாரையாவது காப்பாற்ற இப்படி பொலிசார் நடந்து கொள்கிறார்களா எனவும் கேள்வியெழுப்பட்டு வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்