பிரபல திரைப்பட நடிகர் நர்சிங் யாதவ் உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழில் பாட்ஷா, குருவி, பூஜை, லாடம் போன்ற பல படங்களில் நடித்துள்ளனவர் நர்சிங் யாதவ் (57).
இவர் ஏராளமான தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ரஜினிகாந்த், சிரஞ்சீவி, விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் படங்களில் தனது சிறப்பான பங்களிப்பை நர்சிங் அளித்துள்ளார்.
சில மாதங்களாகவே சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த நர்சிங் அதற்கான சிகிச்சையை பெற்று வந்தார்.
இந்த நிலையில் புத்தாண்டு பிறப்பதற்கு முன்னர் அவர் உயிரிழந்தார்.
நர்சிங்கின் மரணத்திற்கு ரசிகர்களும், திரையுலகினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.