நடிகை சித்ரா வரதட்சணை கொடுமையால் இறக்கவில்லை என அறிக்கையில் கூறப்பட்ட நிலையில் வெளியான புதிய அதிரடி உத்தரவு!

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
190Shares

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழ் சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த மாதம் 9ஆம் சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டல் ஹொட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக நசரத்பேட்டை பொலிசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேமந்த் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கடந்த 14-ம் திகதி கைது செய்தனர்.

பின்னர் இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ கடந்த 14ஆம் திகதி முதல் விசாரணையில் ஈடுபட்டு வந்தார். முதல் நாள் விசாரணையில் சித்ராவின் பெற்றோர், சகோதரி, சகோதரர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, ஹேமந்தின் பெற்றோர் மற்றும் ஹேமந்த்திடம் விசாரணை நடத்தினார்.

சித்ராவுடன் டிவி சீரியலில் நடித்த நடிகர்- நடிகைகள், சித்ரா மற்றும் ஹேம்நாத் ஆகியோரின் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் உள்பட 15 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது. ஆர்டிஓ திவ்யஸ்ரீ தனது விசாரணை அறிக்கையை பூவிருந்தவல்லி உதவி ஆணையர் சுதர்சனத்திடம் ஒப்படைத்தார்

விசாரணை அறிக்கையில் வரதட்சணை கொடுமையால் சித்ரா தற்கொலை செய்யவில்லை என கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சித்ராவின் தற்கொலை வழக்கு தற்போது மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இதை மாற்றி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இதனால் இவ்வழக்கில் புதிய தகவல்கள் மற்றும் திருப்பம் வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்