கைவிட்ட மகன்கள்! முதியோர் இல்லத்தில் பரிதாபமாக உயிரிழந்த தமிழ் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
3199Shares

பிரபல நடிகை பால தங்கம் உடல் நலக்குறைவால் தனது 84வது வயதில் காலமானார்.

மலையாளம் மற்றும் தமிழில் 100 திரைப்படங்களில் நடித்துள்ளவர் பழம்பெரும் நடிகை பால தங்கம். இவர் பாடகி, டப்பிங் கலைஞர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்தார்.

ராதாமணி என்ற இயற்பெயரை கொண்டவராக இருந்த அவர் சினிமாவுக்கு வந்த பின்னர் பால தங்கம் என பெயரை மாற்றி கொண்டார்.

பால தங்கமின் கணவரான காவல் துறை அதிகாரி ஸ்ரீதரன் ஏற்கனவே விபத்தில் உயிரிழந்துவிட்டார்.

இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் மகள் அம்பிலி ஏற்கனவே இறந்துவிட்டார்.

பின்னர் இரண்டு மகன்களும் தங்கத்தை கைவிட்ட நிலையில் முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.

சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தங்கம் நேற்று உயிரிழந்தார்.

அவர் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்