பிக்பாஸ் குழுவை சேர்ந்த கிரியேட்டிவ் மேலாளராக இருந்த 24 வயது இளம்பெண் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்தியில் ஒளிபரப்பாகி வரும் சல்மான் கான் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இந்த பிக்பாஸ் குழுவின் கிரியேட்டிவ் மேலாளராக இருந்தவர் பிஸ்தா தக்காட் (24).
இவர் பிக்பாஸ் செட்டுக்கு அருகில் உள்ள சாலையில் இரு சக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்றார். அப்போது வண்டி சாலையில் உள்ள பள்ளத்தில் மோதிய நிலையில் பிஸ்தா கீழே விழுந்தார்.
அந்த சமயத்தில் அருகில் வந்த வேன் பிஸ்தா மீது ஏறி இறங்கியது.
இந்த விபத்தில் பிஸ்தா பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரின் திடீர் மரணம் பிக்பாஸின் முன்னாள் மற்றும் தற்போதைய போட்டியாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.