ஹாய் அத்தான்! பிக்பாஸில் ஆரி வெற்றி பெற்ற பின் முதல்முறையாக பேசிய அவர் மனைவியான ஈழப்பெண்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
4264Shares

பிக்பாஸ் சீசன் 4ல் ஆரி வெற்றி பெற்ற நிலையில் அவர் மனைவி நதியா உருக்கத்துடன் பேசியுள்ளார்.

பிக்பாஸ்4 இறுதிப் போட்டியில் ஆரி, பாலா, ரியோ, சோம் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றனர். இறுதியில் ஆரி முதல் இடத்தையும், பாலா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

வெற்றியாளரான ஆரிக்கு பரிசுத்தொகை 50 லட்சம் வழங்கப்பட்டது.

வெற்றிக்கு பிறகு ஆரி பேசுகையில், என் வாழ்க்கையில் முதல் இடம் என்பது கிடைத்ததேயில்லை.

எல்லா இடங்களிலும் அவமானங்களே கிடைத்தது. எனக்கான அடையாளம், அங்கீகாரமும் எனக்கு கிடைத்ததில்லை.

ஆனால் இப்போது என்னிடம் பிக்பாஸ் கோப்பையுடன் முதலிடம் என்ற அங்கீகாரம் உள்ளது என பேசினார்.

ஆரி குறித்து அவர் மனைவியும், ஈழப்பெண்ணுமான நதியா கூறுகையில், ஹாய் அத்தான்! உங்களுக்கு வாழ்த்துக்கள்.

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, மக்களின் அன்புக்கும் ஆசிர்வாதத்துக்கும் மிகவும் நன்றி, இதில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள், மகிழ்ச்சியாக இருங்கள் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்