பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த 3 நாட்களுக்குள் பாலாஜிக்கு வந்த சிக்கல்! ஆதாரத்துடன் வெளியிட்ட பிரபலம்

Report Print Santhan in பொழுதுபோக்கு
785Shares

பிக்பாஸ் வீட்டில் ஷெனம் ஷெட்டி வெற்றி பெற்ற அழகி போட்டி பற்றி தவறாக பேசியதற்காக பாலாவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்ட போட்டியாளர்களான பாலாவுக்கும், ஷனம் ஷெட்டிக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை வந்து கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில், ஷனம் ஷெட்டி அழகி போட்டியில் வெற்றி பெற்றது சில சமரசங்களை செய்து தான், மேலும் அந்த நிறுவனம் டுபாக்கூர் கம்பெனி, வெளியில் வந்து நான் அதை நிரூபிக்கிறேன் என்றும் சவால் விட்டிருந்தார்.

இந்நிலையில், ஷனம் செட்டி வெற்றிபெற்ற அழகிப் போட்டியை நடத்திய நிறுவனத்தின் உரிமையாளர் ஜோ மைக்கேல் என்பவர் பாலாஜிக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக ஜோ மைக்கேல் அப்போதே அறிவித்திருந்தார்.

இதையடுத்து இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பாலாவை அவரை விமர்சித்து இருக்கிறார். அவருக்கு வாட்சப்பிலும் லீகல் நோட்டீசை அனுப்பியுள்ள ஆதாரத்தையும் பதிவிட்டுள்ளார்.

மேலும், அதில், தம்பிங்களா 2 நாள்ல சிங்கம் வரும்னு சொன்னாங்க, எங்கயாவது பாத்தீங்களா. இதுல தனுஷ் சார் டைலாக் வேற

லீகல் நோட்டீஸ் அவரது பர்சனல் நம்பருக்கு அனுப்பப்பட்டு விட்டது. பயில்வான் சார் பயப்படாம proof காட்டுங்க உள்ள சொன்னதுக்கு. அப்படி இல்லைனா நீங்க தான் அதுனு (டுபாக்கூர்) கன்பார்ம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்