பிரபல நடிகை தற்கொலை... பேஸ்புக்கில் முன்னரே வெளியிட்ட அதிர்ச்சி பதிவு

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு
0Shares

கன்னட சினிமாவில் இளம் கதாநாயகியாக பிரபலமாகி வந்தவர் ஜெயஶ்ரீ ராமைய்யா. இவர் கன்னட பிக்பாஸ் சீசன்-3 போட்டியிலும் கலந்து கொண்டார்.

Uppu Huli Kara, Kannada Gothilla உள்ளிட்ட திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்த நிலையில், இவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மிக நீண்ட காலமாகவே இவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் விளைவாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதமே, இவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ''I quit. Goodbye to this world and depression'' என பதிவிட்டிருந்தார். இதை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியாக, அவர் அந்த பதிவை நீக்கியிருந்தார்.

ஆனால் வெற்று விளம்பரத்திற்காக இப்படி பதிவிடவில்லை என்றும், உண்மையிலேயே தான் மன அழுத்தத்தில் சிக்கி தவிப்பதாகவும் அவர் பேஸ்புக் நேரலையில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே இன்று அவர் தற்கொலை செய்து மரணமடைந்துள்ளது கன்னட திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்