ரோஜா சீரியல் மூலம் பிரபலமான இளம் நடிகை பொலிசில் பரபரப்பு புகார்! இளைஞருடன் இருக்கும் புகைப்படம் வெளியானதால் அதிர்ச்சி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
0Shares

பிரபல சின்னத்திரை நடிகையான ஷாமிலி சுகுமார் சைபர் கிரைம் பொலிசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

ரோஜா, தென்றல், பூவே பூச்சூடவா உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே புகழ் பெற்றவர் ஷாமிலி சுகுமார்.

இவர் சில திரைப்படத்திலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.

ஷாமிலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருவதால், அவரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்தது வருகின்றனர்.

இந்நிலையில், சில தினங்களாக முன்பாக, ஷாமிலி சுகுமார் பெயரிலேயே போலியான கணக்கு ஒன்று இன்ஸ்டாகிராமில் தொடங்கப்பட்டு, அதில் ஷாமிலியை பற்றியும் அவருடைய குடும்பத்தினர் பற்றியும் அவதூறான கருத்துகள் பகிரப்பட்டுள்ளது.

மேலும், ஷாமிலி, இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகை ஷாமிலி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

புகாரையடுத்து பொலிசார் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்