இலங்கை தமிழரான சின்னத்திரை நடிகர் தூக்கிட்டு தற்கொலை

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
0Shares

தமிழ்நாட்டில் இலங்கை தமிழரான சின்னத்திரை நடிகர் இந்திரகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் இந்திரகுமார்.

இவர் தனியார் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் பெரம்பலூரில் நேற்று இரவு நண்பர்களுடன் திரையரங்கில் படம் பார்த்துவிட்டு, மதனகோபாலபுரத்தில் தனது நண்பரின் வீட்டில் அவர் தனியாக தூங்கியுள்ளார்.

அங்கு மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு இந்திரகுமார் தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் விரைந்து வந்த பொலிசார் உடலைக் கைப்பற்றி அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையில் உயிரிழந்த இந்திரக்குமாருக்கு,மனைவியும், ஒரு மகனும் உள்ளனர் என தெரியவந்துள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்