ஈழத்தமிழ் பெண் கொடுத்த புகார்... 70 பக்க ஆதாரம் ரெடி: ஆர்யாவை தேடி வரும் சி.பி.சி.ஐ.டி பொலிஸ்

Report Print Santhan in பொழுதுபோக்கு
0Shares

பிரபல திரைப்பட நடிகரான ஆர்யா மீது ஈழத்தமிழ் பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து, விசாரிக்க சிபிசிஐடி பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் ஆர்யாவின் மோசடிக்கு ஆதாரமாக 70 பக்க ஆவணங்கள் திரட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பெண்கள் ரசிகர்களின் கூட்டத்தைக் கொண்ட ரசிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஆர்யா. இவருக்கு என்று ஒரு தனி பெண் ரசிகர்களின் கூட்டம் உள்ளது.

இந்நிலையில், ஜேர்மனியில் இருக்கும் சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஈழத்தமிழ் பெண் விட்ஜாவிடம், 3 வருடங்களாக பழகிய நிலையில் விட்ஜாவுக்கு ஆன்லைன் மூலம் காதல்வலை விரித்த நடிகர் ஆர்யா அவரை காதலிப்பது போல நடித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 70 லட்சத்து 40,000 ரூபாய்யை வெஸ்டர்ன் யூனியன் மணிடிரான்ஸ்பர் மூலம் ஆர்யா பெற்றுக் கொண்டுள்ளார்.

ஆனால், அதன் பின் அவரை திருமணம் செய்து கொள்ளாமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் அவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி, பிரதமர் அலுவலகத்திற்கு புகார் வந்ததால், அந்த புகார் பற்றிய தகவல்கள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவர் அந்த புகாரில், உன்னை நான் விரும்புகிறேன். திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன் என்று கூறி தன்னிடம் இருந்து பணத்தை பெற்றதாகவும் சில மாதங்கள் கழித்து தன்னைப் போல பல பெண்களை அவர் ஏமாற்றியுள்ளது தனக்கு தெரிய வந்ததால், தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன்.

அதற்கு, ஆர்யாவின் தாயார் என்னை மோசமாக திட்டியதுடன், ஸ்ரீலங்காகாரி நீ...உலகமெல்லாம் போய் அசிங்கப்படுறீங்க என்று மோசமான வார்த்தைகளால் தன்னை திட்டியதாக குறிப்பிட்டிருந்தார்.

புகார் தொடர்பாக பெருநகர சென்னை பொலிசார் விசாரணையை தாமதப்படுத்தி வந்த நிலையில் ஆர்யா மீதான மோசடி புகார் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தக்கோரி ஈழத்தமிழ் பெண் சார்பாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பட்டாபிராம் ஆனந்தன் நீதிமன்றத்தை நாடினார்.

இதையடுத்து ஆர்யா மீதான மோசடி புகாரை விசாரிக்கும் பொறுப்பு சிபிசிஐடி காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

ஆர்யா மீதான பண மோசடி புகாருக்கு ஆதாரமாக வாட்ஸ் அப் சாட்டிங், குரல் பதிவுகள் உள்ளிட்ட 70 பக்க ஆவணங்களை சிபிசிஐடி காவல்துறையினர் சேகரித்துள்ளனர்.

இதற்கிடையே சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் ஆர்யாவின் உதவியாளர் முகமது அர்மான் முன் ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளார். நிஜத்தில் ஜம்சத் என்ற பெயரில் உள்ள ஆர்யா காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறப்படுகின்றது.

விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள ஆர்யாவை பிடித்து விசாரிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்