கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகை நக்மாவுக்கு கொரோனா! அவர் வெளியிட்ட எச்சரிக்கை பதிவு

Report Print Santhan in பொழுதுபோக்கு
0Shares

பிரபல திரைப்ப நடிகையான நக்மா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாட்டில் இரண்டாவது அலை பரவியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதனால் மக்கள் மிகவும் கவனமுடன் இருக்கும் படியும், கொரோனா விதிமுறைகளையும் பின்பற்றும் படியும் அறிவுறுத்தப்படுகிறது.

இந்நிலையில், பிரபல திரைப்பட நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான நக்மா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். அதன் படி சில தினங்களுக்கு முன்பு நக்மா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கொரோனா தொற்று காரணமாக தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், சில தினங்களுக்கு முன்பு தான் கொரோனாவிற்கான முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்