90 ரூபாய் சம்பளத்திலிருந்து 1800 கோடி ரூபாயில் வியாபாரம்: சாதனை தொழிலதிபரின் கதை

Report Print Raju Raju in தொழிலதிபர்

Balaji Wafers Pvt.Ltd என்ற உருளைக்கிழங்கு வறுவல் தயாரிக்கும் நிறுவனம் இன்று குஜராத், மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் போன்ற இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிரபலம்.

இதன் நிறுவனர் பெயர் சந்துபாய் விரானி (60).

சந்துபாய் எளிய விவசாயியான ராம்ஜிபாய்க்கு மகனாக பிறந்தார். சந்துபாய்க்கு, மேக்ஜிபாய், பிக்குபாய் என இரு சகோதரர்கள் உள்ளனர்.

பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த சந்துபாய் பின்னர் திரையரங்கு ஒன்றில் கேண்டீன் பிரிவில் வேலைக்கு சேர்ந்தார்.

நம்பிக்கையை உருவாக்குதல், தரம், சேவை, பணத்துக்கு மதிப்பு ஆகியவையே எனக்கு முக்கியம் - சந்துபாய்

அவ்வப்போது போஸ்டர் ஒட்டுவது, கதவு திறப்பது போன்ற பணியையும் செய்து வந்த அவருக்கு மாதம் 90 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது.

ஒரு ஆண்டு கழித்து கேண்டீன் உரிமையாளர் 1000 ரூபாய் வாடகையில், சந்துபாய் குடும்பத்துக்கு இடம் கொடுத்தார்.

அங்கு மூன்று சகோதரர்களும் சேர்ந்து பல்வேறு உணவு பொருட்களை விற்க ஆரம்பித்தனர், அதில் உருளைக்கிழங்கு வறுவலும் அடங்கும்.

இதை தயாரிப்பவர் வேலைக்கு அடிக்கடி தாமதமாக வந்ததால் சந்துபாயும் அவர் சகோதரர்களும் தாங்களே உணவு பண்டங்களை தயாரிக்க ஆரம்பித்தனர்.

பிறகு நல்ல லாபம் கிடைக்க, 1982ல் சந்துபாயின் மொத்த குடும்பமும் ராஜ்கோட்டுக்கு இடம் பெயர்ந்தது.

அங்கிருந்து கேண்டீனுக்கு மசாலா சாண்ட்விச்சுகள் செய்தனர். ஆனால் இது விரைவில் கெட்டு போய்விடும் என கூறிய சந்துபாய் உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்தால் கெடாது எனவும், அதில் நல்ல எதிர்காலம் இருக்கும் எனவும் கணித்தார்.

கேண்டீன் வேலை முடிந்ததும் 10000 ரூபாய் செலவில் ஒரு கொட்டகையை வீட்டருகே போட்டு சிப்ஸ் ரகங்களைச் செய்து பார்த்தார். அவரே ஒரு இயந்திரத்தை 5000 ரூபாய் செலவழித்து செய்தார்.

அங்கு தயாரான சிப்ஸ்களை பள்ளிக் கூடங்களுக்கு சந்துபாய் விநியோகிக்க தொடங்கினார்.

1984-ல் தங்கள் வறுவல்களுக்கு ஒரு பிராண்ட் பெயர் வைக்கத் தீர்மானித்து பாலாஜி என்று சந்துபாய் சகோதரர்கள் பெயர் சூட்டினார்கள்.

பின்னர் தொழிலில் சில தோல்விகள், ஏமாற்றங்கள் என அனைத்தையும் மீறி சந்துபாய் கடுமையாக உழைத்து ஐம்பது லட்சம் வங்கிக் கடனுடன் ஒரு ஆலையை 1989-ல் தொடங்கினார்.

பின்னர் தொழில் சூடுபிடிக்க Balaji Wafers Pvt.Ltd நிறுவனம் தொடங்கப்பட்டது.

பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருந்தாலும், மேலாண்மைப் பள்ளிகளில் விரும்பி அழைக்கப்படும் பேச்சாளராக சந்துபாய் உள்ளார்.

அதில் பிக்குபாய், சந்துபாய், கனுபாய் என மூன்று சகோதரர்களும் இயக்குநர்கள் ஆனார்கள்.

ஆரம்பத்தில் மாதம் 20,000லிருந்து 30,000 ரூபாய் வரை வந்த வருமானம் பின்னர் பாலாஜி வறுவலின் தரம் மற்றும் சுவையால் உயர்ந்து கொண்டே போனது.

இன்று ஆண்டுக்கு 1800 கோடி ரூபாய் வியாபாரத்தை பாலாஜி நிறுவனம் செய்கிறது. இந்நிறுவனத்துக்கு தற்போது நான்கு ஆலைகள் உள்ளன.

தினந்தோறும் 6.5 லட்சம் உருளைக்கிழங்குகளை சிப்ஸாக மாற்றும் பாலாஜி நிறுவனம் 30 வகையான ஸ்நாக்ஸ்களை தயாரிக்கிறது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments