ஐடி வேலையை உதறிவிட்டு கீரை விவசாயம்! அசத்தும் தமிழக இளைஞர்

Report Print Fathima Fathima in தொழிலதிபர்
418Shares
418Shares
ibctamil.com

ஆன்லைன் மூலம் உடைகள், செல்போன்கள் மற்றும் பல பொருட்கள் விற்பனையாவது நமக்குத் தெரிந்த விஷயம்.

ஆன்லைன் மூலம் கீரை விற்பனை செய்வதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இந்த வித்தியாச யோசனைக்கு சொந்தக்காரர் ஸ்ரீராம் பிரசாத் ஆவார். கோவையைச் சேர்ந்த இவர் கைநிறைய சம்பாதிக்கும் ஐ.டி வேலையை உதறிவிட்டு இப்போது இணையம் வழியாக கீரை விற்பனை செய்கிறார்.

கோவை சாய்பாபா காலனியில் வசிக்கும் இவர் தெருவில் விற்கப்படும் கீரையை, தொழில்நுட்பத்தின் உதவியோடு பிரத்தியேக ஷோரூம், மொபைல் ஆப், வெப்சைட் என காலத்திற்கு ஏற்றார்போல் மாற்றி கீரைக்கடை.காம் மூலம் விற்பனை செய்கிறார்.

மதுரை சொந்த ஊராகக் கொண்ட இவருக்குத் இவர் தாத்தாதான் விவசாயத்தை அறிமுகப்படுத்தினாராம். இவர் அப்பாவும் அக்ரி டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்தவராம். எனவே இவர் குடும்பம் விவசாய குடும்பம்.

மகன் கஷ்டப்படக்கூடாது என நினைத்த பெற்றோர் இன்ஜினீயரிங் படிக்க வைக்க, படித்து முடித்து ஐ.டி துறையில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்.

ஆனால் அங்கோ மன உளைச்சல் அதிகமாக என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தவற்கு ஒரு ஐடியா உதித்துள்ளது, இதன்படி வீட்டு மாடியில் கீரையை வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்.

இரசாயன கலப்பில்லாத ருசியான கீரைகள் என்பதால் தெரு முழுக்க இவரும் இவர் கீரைகளும் பிரபலமானது. இந்த நேரத்தில் காய்கறி, பழங்கள் விற்பனை இ-காமர்ஸ் மூலம் செய்யும் ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

அங்கேயும் ஸ்ட்ரெஸ் அதிகமாகவே சொந்த தொழில் தொடங்கும் எண்ணம் உதித்துள்ளது. கண் முன் தெரிந்தது கீரை விவசாயம். அதைப் பற்றி தன் நண்பரிடம் பகிர்ந்துக்கொள்ள, யோசனைப் பிடித்தப்போனதால் நண்பர் பிரேமும் இவரோடு கைக்கோர்த்துள்ளார்.

விவசாயத்தைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள இருகூர் தங்கவேள் ஐயாவிடம் இரண்டு வருடங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டார்.

பின்பு இருகூர் தங்கவேள் ஐயா அவர்களின் 7 ஏக்கர் நிலத்திலேயே கீரை விவசாயம் செய்ய ஆரம்பித்துள்ளார். கீரையை விற்பனை செய்ய ஆப்,வெப்சைட் போன்றவற்றை உருவாக்கி விற்பனையை ஆரம்பித்துள்ளார்.

மேலும் அனைத்து கீரைகளும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இருகூர், சூலூர், தொண்டாமுத்தூர், பொள்ளாச்சியைச் சேர்ந்த விவசாயிகளிடம் கீரைகளை நேரடி கொள்முதல் செய்துகொள்கிறார். சிலரின் நிலத்தையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு அதில் தானே கீரை விவசாயமும் செய்கிறார்.

15 கிலோ மீட்டர் வரை உள்ளவர்களுக்கு 35 ரூபாய்க்கு மேல் வாங்கினால் இலவசமாக டோர் டெலிவரி செய்கிறார்.

40 வகையான கீரைகளை விற்பனை செய்து வரும் இவரின் கனவு எதிர்காலத்தில் 100 வகையான கீரைகளை விற்பனை செய்ய வேண்டும் என்பதும்,தென்னிந்திய அளவில் கடையை விரிவுப்படுத்த வேண்டும் என்பதே ஆகும்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்