தம்பியை காப்பாற்றிய அண்ணன் முகேஷ் அம்பானி

Report Print Deepthi Deepthi in தொழிலதிபர்
366Shares
366Shares
ibctamil.com

2002ம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைமையில் துவங்கப்பட்ட ஆர்காம் நிறுவனம் 2005-ம் ஆண்டுச் சொத்துப் பிரச்சனை வந்த போது எண்ணெய் மற்றும் எரிவாயு சொத்துக்கள் முகேஷ் அம்பானிக்கும், டெலிகாம் மற்றும் பவர் நிறுவன சொத்துக்கள் அனில் அம்பானிக்கும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அனில் அம்பானியின், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், 45 ஆயிரம் கோடி ரூபாய் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இந்நிறுவனத்திற்கு அளித்த கெடு இந்தாண்டுடன் முடிவடைய உள்ளதை அடுத்து, கடன் கொடுத்த வங்கிகள், நிதி நிறுவனங்கள், திவால் நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வந்தன.

கடன் தொல்லையில் இருந்து காத்துக்கொள்வதற்காக, அனில் அம்பானி தனது சொத்துக்களை விற்பனை செய்ய பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

இந்நிலையில் தனது தம்பியின் சொத்துக்களை அண்ணன் முகேஷ் அம்பானி வாங்க முடிவு செய்துள்ளார்.

திருபாய் அம்பானியின் 85வது பிறந்த நாள் விழாவில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், சொத்துக்களை, 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, கையகப்படுத்த உள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

இந்த திட்டம் மூலம், அனில் அம்பானி, பெரும் கடன் சுமையில் இருந்தும் கடன் மீட்பு நடவடிக்கைகளில் இருந்து மீண்டுள்ளார்.

முகேஷ் அம்பானியின் இந்நடவடிக்கைக்கு தொலைதொடர்பு சேவை துறை பாராட்டு தெரிவித்துள்ளது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்