30 ரூபாயில் தொடங்கி கோடிக்கணக்கில் வியாபாரம்!

Report Print Gokulan Gokulan in தொழிலதிபர்
176Shares
176Shares
ibctamil.com

”கடினமாக உழைத்தால் கனவு நனவாகும்” என்பதற்கு சான்றாக விளங்கும் பல பேர்களில் ஒருவர் தான் மும்பையை சேர்ந்த ஷிவ் சாகர் ரெஸ்டாரண்டின் நிறுவனர் திரு.நாராயண் பூஜாரி.

புகழ் பெற்ற சைவ உணவகமாக இருக்கும் ஷிவ் சாகர் ரெஸ்டாரெண்ட் தற்போது மும்பையின் அடையாளமாக திகழ்கிறது.

ஒரே பாடலில் கோடீஸ்வரானாக மாறுவது சினிமாவில் மட்டுமே சாத்தியம், என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.

இத்தகைய சூழ்நிலையில் கையில் வெறும் 30 ரூபாயுடன் தனது கனவு நகரமான மும்பைக்கு வந்து இரவு பகல் பாராமல் உழைத்து இன்று 20 கோடி முதல் வருமானம் ஈட்டுகிறார் என்றால் நம்பமுடிகிறதா?

இவ்வுலகில் பல சாதனையராளர்களின் வெற்றி சோதனையிலும், வேதனையிலும் இருந்து தான் தொடங்கும்.

விவசாய குடும்பத்தில் மூத்தவராக பிறந்ததால் கட்டாயம் வேலைக்கு செல்லவேண்டி மும்பைக்கு தனது பாட்டி கொடுத்த 30 ரூபாயுடன் கேன்டீனில் வெய்ட்டாராக சேர்ந்தார்.

உறவினரின் உதவியோடு காலையிலிருந்து மாலை வரை வேலை செய்வதும், இரவில் கல்வியும் என கடிகாரம் போல் ஓடத்தொடங்கினார்.

கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்று தான் செய்யும் சொந்த தொழிலில் ஆர்வத்துடன் தினசரி நிர்வாக ரீதியான விஷயங்களை கற்றறிந்தார்.

அவர் வாழ்வில் கடந்து வந்த பாதையில், தினசரி காலை 6.30-க்குத் தொடங்கி தமது பணிகளை ஒழுங்கமைத்துக் கொண்டு, 9.30-க்கு வீட்டை விட்டு வெளியேறும் அவர், தமது ரெஸ்டாரெண்ட்களைச் சுற்றி வருவார்.

தேர்ந்தெடுத்து ஒரு சில ரெஸ்டாரெண்ட்டுகளுக்கு நேரில் சென்று கண்காணிப்பதை வழக்கமாகவும் வைத்திருக்கிறார்.

“கெம்ஸ்கார்னர் மற்றும் சர்ச்கேட்டில் உள்ள கிளைகளுக்கு எப்போதுமே என் இதயத்தில் சிறப்பான இடம் உண்டு,”எனும் நாராயண் “ அந்த ரெஸ்டாரெண்ட்களில்தான் பொதுவாக நான் இருப்பேன். ஆனால், குறிப்பிட்ட சில ரெஸ்டாரெண்ட்களைத் தேர்வு செய்து அங்கு கண்காணிப்பை மேற்கொள்வேன்.

வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்கும், வாடிக்கையாளர்களின் மாறுபட்ட சுவைகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கும் இது உதவுகிறது.”

பல்வேறு வகையில் பாடுபட்டு உழைத்து கொண்டிருந்தவர் பல வகை உணவை மெனுவில் சேர்த்து அதில் வெற்றியும்பெற்று பெரிய நிறுவனமாக தொடங்கி வரவேற்பை பெற்று அசத்தினார்.

இதற்க்கு இவரது மனைவியார் யசோதா துணையாக இருந்தார் என்றும் குறிப்பிடுகிறார்.

மேலும் நிகிதா மற்றும் அங்கிதா என இரண்டு நாராயணனுக்கு இரு புதல்விகள் இப்போது, சாண்டாகுரூஸ் பகுதியில் இருவரும் ஷிவ் சாகர் ஃபுட்ஸ் மற்றும் ரிசார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்களாக இருக்கின்றனர்.

சுவாமி விவேகானந்தா கல்லூரியில் இன்ஸ்ரூமென்டல் இன்ஜினியரிங் பிரிவில் நிகிதா பட்டம் பெற்றுள்ளார். அண்மையில், தந்தையின் தொழிலில் அவரும் நுழைந்துள்ளார்.

பந்த்ரா குர்லா காம்ப்ளக்சில் பிஷ் பெய்ட் எனும் அசைவ உணவு ரெஸ்டாரெண்டடை நடத்தி வருகிறார். குடும்பத்தில் உள்ள அனைவரது பங்கும் தொழில் இருக்கிறது எனவும் ஆனந்தத்துடன் கூறினார்

நட்சத்தர ரெஸ்டாரன்டிற்கு அந்தஸ்து சேர்க்கும் வகையில் சச்சின், ஜாக்கி ஷ்ராஃப் போன்ற பல நட்சத்திரங்கள் இங்கு வந்து ருசிப்பது பெருமையாக உள்ளது என தனது இன்ப துன்பங்களை பகிர்கிறார் நாராயண்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்