60 ரூபாயில் தொடங்கி கோடிகளில் புரளும் நபர்! வெற்றியின் ரகசியம் இதோ

Report Print Gokulan Gokulan in தொழிலதிபர்
513Shares
513Shares
ibctamil.com

சேலைகளை மூட்டையாக கட்டி, தோளில் சுமந்துகொண்டு கொல்கத்தாவின் வீதிகளில் வீடு, வீடாக சென்று விற்ற திரு.பைரன் குமார் பசக் இன்று கோடிகளில் புரள்கிறார்.

பல சோதனைகளை சந்தித்தவர்களுக்கு தான் "சாதனை எனும் வெற்றிக்கனி" கிடைக்கும்.

குறைந்த ரூபாய் நிறைந்த கோடியாக மாறிய கதை இதோ

நாடு முழுவதும் உள்ள துணிக்கடைகளுக்கு சேலைகள் விற்கும் மொத்த வியாபாரியாக திகழும் பைரன் குமார் நெசவாளர் பின்னணியைச் சேர்ந்தவர்.

இவரது தந்தை பாங்கோ பிகாரி பசக் நெசவு தொழில் மட்டுமல்லாமல் கவிஞராகவும் இருந்தார்.

அவரது குடும்பத்தில் நான்கு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் இருக்கின்றனர், இவர் 6 பேரில் இளையவர்.

அவருடைய தந்தையின் வருமானம் குடும்பத்தை நடத்தப் போதுமானதாக இல்லை, கவிஞராக ஒருமுறை மேடையில் தோன்றுவதற்கு 10 ரூபாய்தான் அவருக்குக் கிடைத்தது.

தன் இளமைப்பருவம் குறித்து பைரன் குமார் விவரிக்கையில், ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவுக்கு கூட பத்து ரூபாய் போதுமானதாக இல்லை, அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தில் விளைந்த பொருட்கள் எங்கள் குடும்பத்தின் உணவுத் தேவைக்குப் போதுமானதாக இருந்தன.

6-ம் வகுப்பு வரை படித்த நான், உள்ளூர் கோவில் புரோகிதரிடம், பாசுரங்கள் பாடக் கற்றுக்கொண்டேன்.

என்னுடைய சிறு வயதிலிருந்தே, என் இயல்பிலேயே நான் கடவுளை நோக்கி ஈர்க்கப்பட்டேன், இது எனக்கு அமைதியைத் தருகிறது என தெரிவிக்கிறார்.

குடும்பத்தின் பணத் திண்டாட்டம் அவரை மேற்கொண்டு படிக்கவிடாமல் செய்ததால், உள்ளூரில் ஒரு இடத்தில் பைரேன் சேலைகள் நெய்ய ஆரம்பித்தார்.

தினமும் 2.50 ரூபாய் சம்பாதித்தார், அடுத்த எட்டு வருடங்களுக்கு அதே தொழிற்சாலையில், குடும்பத்தின் வருமானத்துக்கு உதவும் வகையில் பணியாற்றினார்.

புகுலியாவில் 1968-ம் ஆண்டு அவரது சகோதரர்கள் வாங்கிய வீட்டை அடமானம் வைத்து ரூபாய் 10 ஆயிரம் கடன் வாங்கி 1970-ம் ஆண்டில், சொந்தத்தொழில் தொடங்கி சகோதரர் தீரன் குமார் பசக் உடன், கொல்கத்தாவுக்கு சேலைகளை எடுத்துச் சென்று விற்கத் தொடங்கினார்.

சுமையை தாங்கி சுகம் கண்ட பசக்

தினமும் காலை 5 மணிக்கு உள்ளூர் ரயிலில் ஏறி நகருக்குச் செல்வார்களாம், தங்களது தோள்களில் 80 முதல் 90 கிலோ வரையிலான சேலைகளை தூக்கிக் கொண்டு வீடு, வீடாகச் சென்று விற்பனை செய்து இரவு தாமதமாக வீடு திரும்புவார்களாம்.

வாடிக்கையாளர்களும் உயர்ந்தனர் வருவாயும் உயர்ந்தது

கடின உழைப்பின் பயனாக தரமான சேலைகளை விலை குறைவாக விற்பனை செய்ததால், அதிக அளவுக்கு வாடிக்கையாளர்களைப் பெற்று, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

நல்ல ஆர்டர்களும் கிடைக்கத் தொடங்கியதால் லாபம் சம்பாதிக்கத் தொடங்கினர்.

1978-ம் ஆண்டில் இரண்டு சகோதரர்களும் சேர்ந்து மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தனர். சகோதரர்கள் இருவரும், பிரிவது என்று முடிவு செய்து பிரிந்தனர்.

கற்பனைத்திறன் கைகொடுக்கும்

கொல்கத்தாவில் இருந்து திரும்பி வந்ததும் 1987-ல் சொந்தக் கடையை தொடங்கினார். தமது வீட்டிலேயே பைரேன் பசக் அண்ட் கம்பெனி என்ற பெயரில் எட்டு ஊழியர்களுடன் நிறுவனத்தைத் தொடங்கினார்.

கற்பனைத் திறனுடன் சிறந்த வடிமைப்பு உடன் கூடிய சேலைகளைக் வடிவமைத்தால் தொழிலிலும் படுஜோராக வளர்ந்தது.

2016-17-ம் ஆண்டில் அவரது நிறுவனம் 50 கோடி ரூபாய் ஆண்டு வருவாயைத் தொட்டு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது. இவரின் தொழிலுக்கு மனைவி பாணியும் அவருக்குப் பெரும் ஆதரவு தருகிறாராம்.

தம் மகனான அபிநபா(27 வயது) வியாபாரத்தில் கால் பதிக்க அனுமதிக்கவில்லையாம், சிறிய அளவில் நூல் வர்த்தகத்தில் ஈடுபடச்செய்திருக்கிறார்.

வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு கடினமானது என்பதை தன் மகன் உணர்ந்த பின்னரே, வியாபாரத்தில் நுழைய அனுமதி என்கிறார்.

இப்படித்தான் ஜொலிக்கிறாரா?

2013-ம் ஆண்டு மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட சந்த் கபீர் விருது உள்ளிட்ட பல்வேறு மதிப்பு மிக்க விருதுகளை பெற்றுள்ளார்.

அவரிடம் பல பிரபலங்களான மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி, இசையமைப்பாளர் உஸ்தாத் அம்ஜத் கான், நடிகை மவுஸூமி சாட்டர்ஜி உள்ளிட்ட பலர் வாடிக்கையாளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்