அதிக செலவு இல்லாமல் தொழிலதிபராய் ஜொலிக்க வேண்டுமா?

Report Print Gokulan Gokulan in தொழிலதிபர்
153Shares
153Shares
ibctamil.com

வேகமாக ஓடி கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில், வேலை இல்லாமலும், வேலையை இழந்து தவிப்பவர்களில் ஒருவரா நீங்கள்?

அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

மனிதராய் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஓர் திறமை நம்மை அறியாமல் நம்முள் ஒளிந்திருக்கும். அதை மைய்யமாக வைத்து தொழில் துவங்கினாலே போதும் வெற்றியாளராக மாறலாம்.

வீட்டிலிருந்தே பல விதமான தொழில்களை செய்யலாம். கணித மேதையா நீங்கள் ? அக்கௌன்ட்ஸ் போன்ற ஆடிட்டிங் வேலை தெரிந்திருந்தால் பல நிறுவனங்களுக்கு கணக்காளராக பணியாற்றலாம். வரவு, செலவு போன்றவற்றை சரியாக குறிப்பிட்டு நிறுவனத்திற்கு நிதி சேமிப்பு பற்றியும் எடுத்துரைக்கலாம்.

சிலருக்கு பொழுதுபோக்காய் திகழும் நடவடிக்கைகள் கூட தொழிலாக மாற தூண்டும். உதாரணத்திற்கு நீங்கள் ஓர் புகைப்பட கலைஞர் என்றால் திருமண நிகழ்ச்சிகளில் புகைப்படம் எடுத்து சிறந்த முறையில் வாடிக்கையாளர்களை தீட்டலாம். கையில் கேமரா இருந்தால் போதும் இதற்க்கு முதலீடு போன்ற பெரிய அளவில் எந்த செலவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிலருக்கு கதை எழுதும் திறன் அமைந்திருக்கும், இவ்வாறு திறன் உள்ளவர்கள் ஃப்ரீலேன்சிங் எனும் பகுதி நேர வேலையை பெரிய நிறுவனங்களுக்கு செய்து நல்ல வருவாய் ஈட்டலாம்.

விளையாட்டில் ஆர்வம் அதிகமாய் இருந்தால் அணியின் பலம் கண்டு எந்த அணி ஜெயிக்கும் என கருத்து மாற்றம் பகிர்ந்து பணம் பார்க்கலாம், இது பெட்டிங் போன்றவற்றுள் இருப்பதால் சில ஊர்களிலே இது சாத்தியமாகும்.

குழுவாக இருக்கும் நண்பர்கள் கூட்டம் என்றால் ஆன்- லைன் விநியோகஸ்தராக பணியாற்றலாம்.

ஓவியம் தீட்டும் கலைஞர் என்றால் ஓவியம் வரைந்து அதனை வீட்டு அலங்கார பொருளாக ஏலத்தில் விற்று அதையே நாளடைவில் பெரிய தொழிலாக செய்யலாம்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பது போல் எந்த ஒரு தொழிலிலும் ஈடுபாட்டுடன் செய்தால் அதில் நல்ல பெயரை சம்பாதித்து சிறந்த தொழிலதிபராய் உருவெடுக்கலாம்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்