சொல்லி அடிக்கும் கில்லியாக விளங்கும் நல்லி குடும்பத்தினர்

Report Print Thuyavan in தொழிலதிபர்
187Shares
187Shares
ibctamil.com

ஆள் பாதி, ஆடை பாதி என்பதற்கேற்ப ஒரு மனிதரை பார்த்தவுடனே கவனத்தை ஈர்ப்பது அவரது உடை தான்.

உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்றுமே வாழ்விற்கு இன்றியமையாத ஒன்று, சிறந்த உடை விற்பனையாளராக விளங்கும் நல்லி நிறுவனத்தின் பெருமையை இப்பதிவில் பார்க்க போகிறோம்.

நல்லி குடும்பத்திலிருந்து தங்கள் குடும்பத் தொழிலில் இணைந்த முதல் பெண் லாவண்யா (33 வயது) சாதனை பெண்ணாகவும் வலம் வருகிறார்.

கொள்ளுத்தாத்தா நல்லி சின்னசாமி செட்டி 1800களின் இறுதியில் சென்னையில் பட்டுச் சேலைகள் விற்கத் தொடங்கினார்.

பிறகு 70 கிமீ தொலைவில் இருந்த தனது சொந்த ஊரான காஞ்சியில் இருந்து மிதிவண்டியில் பட்டுச்சேலைகளைக் கொண்டுவந்து அப்போதைய மெட்ராஸான சென்னையில் விற்றார்.

பிறகு தி.நகரில் 1928ல் சின்ன கடையைத் தொடங்கினார். 90 ஆண்டுகள் கழித்து இன்றும் நல்லி சில்க்ஸ் என்பது பட்டுச் சேலைகளின் மிகப்பெரிய பிராண்டாக விளங்குகிறது என்றால் அதற்க்கு நல்லி சின்னசாமியின் உழைப்பே காரணம்.

தம் நிறுவனம் பற்றி கூறுகையில், “நானும் தொழில்துறையில் சேர்வதுகுறித்து என் அப்பா முதலில் தயங்கினார், நான் உறுதியாக இருந்ததால் அனுமதித்தார்,”

2007-ல் நல்லி நெக்ஸ்ட் என்ற உப பிராண்டைத் தொடங்கினோம், கடைக்கு வரும் இளம் வாடிக்கையாளர்களிடம் உரையாடியதில் நல்லி நெக்ஸ்டுக்கான திட்டம் உருவானது.

நல்லி என்றாலே திருமணப் புடவைகள், பட்டுப்புடவைகள் வாங்குவதற்கான இடம், இளையோருக்குத் தேவையானவை இருக்காது என்ற எண்ணத்தை மாற்றியமைத்தோம்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் சின்னதாக ஒரு கடையைத் திறந்து பரிசோதனை செய்தோம். நல்ல விற்பனை.

எனவே பெங்களூரு, மும்பையில் இரு கடைகளைத் திறந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக 32 கடைகள் இயக்கி வருகிறோம்.

தொடர்ந்து 2012-ல் தங்க நகை விற்பனையிலும் ஜொலிக்க அடித்தளம் தீட்டி அதிலும் வெற்றி பெற்றதாக மகிழ்கிறார் திருமதி. லாவண்யா.

என்ன மாற்றங்களை நான் கொண்டுவந்தாலும் தலைமுறைகளாக நாங்கள் கடைப்பிடிக்கும் கொள்கைகள் மாறாது எனவும் உறுதியளிக்கிறார்.

தற்போது பெங்களூரில் வசிக்கும் லாவண்யா நல்லியின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், ஏழு மாத மகன் ருத்ராவின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்துகிறார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்