லட்சக்கணக்கில் சம்பளத்தை உதறிவிட்டு பால் பண்ணை! கோடிகளில் புரளும் சாதனை மனிதன்

Report Print Fathima Fathima in தொழிலதிபர்

இந்தியாவில் வெறும் இரண்டே ஆண்டுகளில் இரண்டு கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டி கோடிகளில் புரள்கிறார் சந்தோஷ் ஷர்மா எனும் தொழிலதிபர்.

ஜார்கண்ட மாநிலத்தின் ஜம்ஷெட்பூர் எனும் பகுதியில் அதிக வசதியில்லாத குடும்பத்தில் கடந்த 1977ம் ஆண்டு யூன் 29ம் திகதி பிறந்தவர் சந்தோஷ் ஷர்மா.

இவர் பிறந்த ஒரு வருடத்திலேயே இவரது தந்தை ஆர்.கே ஷர்மா பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட குடும்பமே கஷ்டத்தில் இருந்துள்ளது.

இதனால் சொந்த ஊருக்கே திரும்பி விடலாம் என ஆர்கே ஷர்மா முடிவெடுக்க, குழந்தைகளின் கல்விக்காக தான் உழைக்க முன்வந்துள்ளார் இவரது தாய்.

கையில் இருந்த காசைக் கொண்டு ஒரு மாட்டை வாங்கி பால் விற்று பிழைப்பு நடத்தியுள்ளனர்.

பள்ளிக்கு செல்லும் முன் வீடு, வீடாக சென்று பால் ஊற்றி விட்டு செல்வாராம் சந்தோஷ்.

ஒரு வழியாக மாடுகளின் எண்ணிக்கை 25-யை தொட்டுவிட குடும்பம் சில முன்னேற்றங்களை அடைந்துள்ளது.

அக்கஷ்டத்திலும் படிப்பை விடாமல் 12ம் வகுப்பு வரை படித்த சந்தோஷ், மேல்படிப்புக்காக டெல்லி சென்று B.Com எனும் இளங்கலை படிக்க சேர்ந்துள்ளார்.

1999ம் ஆண்டு இளங்கலையுடன் சேர்த்து பொருளாதாரம் தொடர்பான படிப்பையும் கூடுதலாக படித்தவருக்கு முதன்முறையா மாருதி நிறுவனத்தில் ரூ.4800 சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.

ஆறு மாதம் வேலை பார்த்ததும் மற்றொரு நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.

தொடர்ந்து 2003ம் ஆண்டு UPSC தேர்வுக்காக தன்னை தயார்படுத்திக் கொள்ள முனைந்தவர், 2004ம் ஆண்டு ஜாம்ஷெட்பூரில் உள்ள வங்கியில் மேலாளராக பணியாற்றத் தொடங்கினார்.

அதே ஆண்டு சந்தோஷ் ஷர்மாவுக்கும், அம்பிகா என்ற பெண்ணுடன் திருமணமாக மகன், மகள் என இரு பிள்ளைகள் பிறந்தன.

காலங்கள் செல்லச் செல்ல 2013ம் ஆண்டு மறைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதற்கு இடைபட்ட காலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றத் தொடங்கியதுடன், பல்வேறு நிறுவனங்களுக்கு சென்று Motivational Speaker-வும் சேவையாற்றிக் கொண்டிருந்தார்.

இவரது புத்தகங்கள் அப்துல் கலாம் அவர்களை கவர்ந்துவிட, நேரில் அழைத்து பேசினாராம்.

எதிர்கால இளைஞர்களுக்காக உழைக்க வேண்டும் என்ற அப்துல் கலாமின் அறிவுரையால் ஈர்க்கப்பட்டு, ஏற்கனவே தங்களது குடும்பத் தொழிலாக இருந்த பால் பண்ணையை மீண்டும் தொடங்க முடிவெடுத்தார்.

இதற்காக கடந்த 2014ம் ஆண்டு சொந்த ஊர் திரும்பியவர் ரூ.80 லட்சம் செலவழித்து எட்டு மாடுகள், 68 ஏக்கர் பரப்பில் M’ma எனும் நிறுவனத்தை தொடங்கினார்.

ஜார்கண்ட் மாநிலத்தின் நக்சல் தாக்குதலுக்கு உள்ளாகும் பகுதிகளில் ஒன்றான தல்மா என்கிற இடத்தில் உருவாக்கப்பட்ட இவரது பண்ணை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

காரணம் ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான முறையில் தயாராகும் பால் தான்.

படிப்படியாக வளர்ச்சி அடைந்து தற்போது 100 மாடுகளுடன், 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர்.

முக்கியமாக 30வயதுக்கும் குறைவான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் சந்தோஷ் சர்மா.

2016- 2017ம் ஆண்டில் ரூ.2 கோடி வரை வருமானம் ஈட்டியதுடன் ஜார்கண்ட் அரசாங்கத்தின் விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார்.

எப்போதும் உங்களுடைய கனவுகளை நினைவாக்க போராடுங்கள், ஆனால் ஒருபோதும் அதனை சமுதாயத்திற்கு திருப்பி தர மறக்க வேண்டாம் என்பதே இவரது தாரக மந்திரமாகும்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers