இட்லி மாவு விற்று கோடிக்கணக்கில் வருமானம்! வெளிநாடுகளில் அசத்தும் கேரளாவின் இளம் தொழிலதிபர்

Report Print Kabilan in தொழிலதிபர்

இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முஸ்தஃபா என்ற கணினி பொறியாளர், இட்லி மாவு உற்பத்தியில் தொழிலதிபராக உயர்ந்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்தவர் முஸ்தஃபா, கணினி பொறியியல் படித்து முடித்துவிட்டு பின்னர், பெங்களூருவில் உள்ள IIM-யில் மேலாண்மை பட்டம் பெற்றார்.

இவருக்கு உணவின் மீது மிகுந்த ஆர்வம் உள்ளது. எனவே, அதே துறையில் சாதிக்க நினைத்த முஸ்தஃபா, கணினித் துறையில் நல்ல வேலை கிடைத்த போதிலும் இட்லி மாவு தயாரிப்பில் இறங்கினார்.

இதற்காக, தனது நான்கு சகோதரர்களை சேர்த்துக் கொண்ட முஸ்தஃபா, கடந்த 2006ஆம் ஆண்டு பெங்களூருவில் ’iD Fresh’ எனும் நிறுவனத்தை சிறிய அளவில் தொடங்கினார். மாவு தயாரிப்பு மற்றும் அதனை Pack செய்வதற்கு என இயந்திரங்களை வாங்கினார்.

முஸ்தஃபா தனது நிறுவனத்தை தொடங்கிய சில வாரங்களிலேயே நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து, உணவினை பதப்படுத்தும் செயற்கை பொருட்களை சேர்க்காமல் வீட்டிலேயே சமைக்கக் கூடிய வகையில் பெரிய அளவில் தயாரிப்பில் ஈடுபட்டார்.

இதனால் இவரது தொழில் விரிவடைந்தது. பெங்களூரு மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேலான சில்லறை வர்த்தக நிலையங்கள் உருவாகின. இவற்றில் 12 ஆயிரம் நிலையங்கள் குளிர்சாதன வசதியை கொண்டவை. தங்களின் தயாரிப்புகளை முடிந்த அளவுக்கு இந்த நிலையங்களுக்கு கொடுப்பதே இவர்களின் இலக்கு.

அதன் பின்னர், சில ஆண்டுகள் கழித்து தங்களின் வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த நிதி திரட்ட விரும்பினார் முஸ்தஃபா. 2014ஆம் ஆண்டு Helion Venture Partners என்ற நிறுவனத்திடமிருந்து 35 ஆயிரம் கோடி நிதி திரட்டினர்.

அச்சமயம் இந்நிறுவனத்தில் 600 பேர் பணி புரிந்தனர். இந்த நிதி மேலும் வளர்ச்சியடையவும், புதிய பொருட்களை சந்தைப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது. தற்பொழுது 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாட்கள், 8 அலுவலகங்கள், 7 தயாரிப்பு நிலையங்களைக் கொண்டு செயல்படுகிறது.

இட்லி, தோசை மாவு தவிர, மலபார் பரோட்டா மற்றும் சட்னி ஆகியவற்றையும் இவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். தென்னிந்தியாவில் இவர்கள் தயாரிப்பு முன்னணியில் உள்ளது.

ஒவ்வொரு கடையிலும் எவ்வளவு மாவு தேவைப்படும் என்று கணிக்கும் அளவிற்கு இவர்களின் வளர்ச்சி உள்ளது. இன்று இந்நிறுவனம், இந்தியா முழுவதும் சுமார் 9 நகரங்களில் தங்களுடைய கிளைகளை நிறுவியுள்ளது.

நாள் ஒன்றுக்கு சுமார் 50,000 Packets தோசை மற்றும் இட்லி மாவை தயாரித்து, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுமார் 15,000-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு விநியோகம் செய்கின்றனர்.

இது தொடர்பாக முஸ்தஃபா கூறுகையில், ‘சுகாதார முறையில் Pack செய்து நுகர்வோர் பயன்பாட்டிற்கு அளிக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். தரம் மற்றும் Packaging ஆகியவற்றில் நாங்கள் மிகுந்த கவனம் கொண்டுள்ளோம்.

இந்த தயாரிப்புக்கான சந்தை பெரிய அளவிலேயே உள்ளது. 50 ஆயிரம் கிலோ மாவு தயாரிக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட ஒரு மில்லியன் இட்லி செய்ய தேவைப்படும் அளவாகும்.

தயாரித்த மாவை, Seal Pack செய்து அதிகாலை 5 மணிக்கு குளிரூட்டப்பட்ட வண்டிகளில் ஏற்றுகிறோம். பெங்களூரு மற்றும் இதர நகரங்களுக்கும் இது கொண்டு செல்லப்படுகிறது. ஆயிரக்கணக்கான சில்லறை வர்த்தக நிலையங்களுக்கு மதியம் 2 மணிக்குள்ளாக எங்கள் தயாரிப்பு சென்றடைந்துவிடும்.

ஒன்லைன் மூலம் நுகர்வோர் தங்களின் தேவைக்கு ஏற்ப Order செய்து கொள்ளும் வாய்ப்பு இருந்தாலும், ஒன்லைன் மூலம் நடைபெறும் வர்த்தகம் மிக சிறிய அளவிலேயே உள்ளது. எங்களின் முன்னோடி நிலையை தக்க வைத்துக் கொள்ளவே விரும்புகிறோம்.

2020ஆம் ஆண்டுக்குள் ஆயிரம் கோடி மதிப்புள்ள நிறுவனமாக உருவெடுக்க வேண்டும் என்பதே எங்களின் இலக்கு’ என தெரிவித்துள்ளார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers