டீ விற்று மாதம் ஒரு லட்சம் வருமானம்: மிரளவைக்கும் இளைஞர்

Report Print Raju Raju in தொழிலதிபர்
337Shares
337Shares
lankasrimarket.com

இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் டீ வியாபாரம் செய்து மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வசிக்கும் ரகுவீர் சிங் சவுத்ரி என்ற இளைஞர் ஓன்லைன் மூலமே டீ விற்பனை செய்கிறார்.

ரகுவீரிடம் ஆர்டர் செய்த சில நிமிடங்களில் வீடு தேடி சூடான டீ சப்ளை செய்யப்படுகிறது.

ஆரம்பத்தில் ரகுவீர் சிங் ஓன்லைன் வர்த்தக நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்திருக்கிறார். ஓன்லைன் மூலம் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருளை சைக்கிள் மூலம் வீடு தேடி சென்று வினியோகிக்கும் பணியை செய்திருக்கிறார்.

சைக்கிள் சவாரியின்போது ஏற்படும் களைப்பை போக்க ஆங்காங்கே டீ அருந்தி ஆசுவாசப் படுத்திக்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.

அப்போதுதான் தான் கொண்டு சேர்க்கும் பொருட்களை போலவே டீயையும் வீடு தேடி சென்று சப்ளை செய்யும் எண்ணம் உதயமாகி இருக்கிறது.

இதையடுத்து செல்போனை மட்டும் முதலீடாக வைத்து ஓன்லைன் டீ வியாபாரத்தில் ரகுவீர் களமிறங்கினார்.

15 நிமிடங்களில் வீடு தேடி டீ கொண்டு வந்து தருகிறேன் என்று ஓன்லைன் மூலம் விளம்பரம் செய்த நிலையில் மக்களை அது ஈர்த்தது.

பின்னர் நண்பர்களின் துணையுடன் வியாபாரத்தை விரிவுபடுத்தி விட்டார்.

பிரபலமான கடைகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு டீ கொடுத்து வரவேற்கும் வழக்கம் இருப்பதால் அந்த நிறுவனங்களில் மொத்தமாக ஆர்டர் வாங்கி டீ சப்ளை செய்து வருகிறார்.

தற்போது 4 இடங்களில் டீ சப்ளை செய்வதற்கான மையங்களை நிறுவியிருக்கும் ரகுவீர் இதன் மூலம் மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கிறார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்